Posts

Showing posts from June, 2018

காலா படம் எப்படி? வசூல் சாதனை படைக்குமா......

Image
#shared ஸ்டைல் கிங் ரஜினிகாந்த்தும், வளரும் இயக்குநர் பா.ரஞ்சித்தும் இணைந்துள்ள படம் காலா. இந்த காம்போ படத்தை காப்பாற்றியதா என்பதை பார்க்கலாம். இந்த படத்தில் ரஜினிகாந்த்தின் பாடி லேங்குவேஜ், ஸ்டைலிஷ் லுக், டயலாக் டெலிவரி மிஸ் ஆகியுள்ளது. இப்போதுள்ள மல்டிபிளக்ஸ் ரசிகர்கள் மனநிலையை கருத்தில் கொண்டு, ரஜினிகாந்த்தை பா.ரஞ்சித் கையாண்டுள்ளார். ரஜினியின் புகழ்பெற்ற டச்களை விட்டுவிடாமலும், இப்போதைய ரசிகர்களை திருப்திப்படுத்தவும் ரஞ்சித் முயன்றுள்ளார். ஆனாலும், எல்லா ரஜினி படங்களை போலவே, இதிலும் ரஜினி மட்டுமே முன்னணியில் நிற்கிறார். டெக்னிக்கலாக காலா சிறப்பாக உள்ளது. முதலுக்கு மோசமில்லாத திரைக்கதை. ஜில்லிட வைக்கும் சண்டை காட்சிகள், கண்கவரும் நடன அமைப்புகள் உள்ளன. பெரும்பாலும் குடிசை பகுதிகள் பின்னணி கொண்ட கதை அமைப்பில், கலை வேலைப்பாடுகள் சபாஷ் போட வைக்கின்றன. பின்னணி இசை சிறப்பாக உள்ளது. எடிட்டிங்கும் ஷார்ப்பாக உள்ளது.  ரஜினிகாந்த்துக்கு மற்றொரு வெற்றிப்படமாக அமையும் வாய்ப்பு உள்ளது. இவ்வாறு நமது வாசகர் உமைர் சந்து கூறியுள்ளார். #Kaala Review from Singapore * Best Ever Intro...

12th அடுத்து என்ன படிக்கலாம்? எதை எடுத்தால் வேலை நிச்சயம்....

Image
உங்கள் மகன் / மகள் குறைந்த மதிப்பெண் எடுத்தவரா அல்லது அதிக மதிப்பெண் எடுத்தவரா.... தமிழ் வழி கல்வி கற்றவரா / ஆங்கிலம் வழி கல்வி கற்றவரா...எதை பற்றியும் கவலை பட வேண்டாம்..!  என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்?  எப்படி ஒரு கல்லூரி தேர்ந்தெடுப்பது..?  எப்படி படிக்க வேண்டும்..!!  என பல கேள்விகளுக்கு பதில் தருகிறார். நமது பொறியாளர் நண்பர் யோகராஜன் தெரிவிக்கும் அவர் கருத்தை கீழ் கானலாம்.  "என்ஜினீயரிங் கற்றால் (படித்தால் அல்ல) வேலை உண்டு"