நம்ம ஊர் வேட்பாளர்கள் யார்யார்? இதுவரை என்ன செய்தார் மரகதம்?
காஞ்சிபுரம் நாடாளமன்றம் தனித்தொகுதி
காஞ்சிபுரம் லோக்சபா தொகுதியானது தமிழ்நாடு மாநிலத்தின் முக்கிய தொகுதிகளில் ஒன்று. மரகதம் கெ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேட்பாளராக போட்டியிட்டு தற்போது காஞ்சிபுரம் எம்பியாக உள்ளார். 2014 பொதுத் தேர்தலில் மரகதம் கெ தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட செல்வம் ஜி திமுக வேட்பாளரை 1,46,866 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார். கடந்த தேர்தல்களில் 76 சதவீத மக்கள் வாக்களித்தனர். காஞ்சிபுரம் தொகுதியின் மக்கள் தொகை 18,98,119, அதில் 60.13% மக்கள் ஊரகப் பகுதிகளில் வசிக்கின்றனர். 39.87% பேர் நகர்ப்புறங்களில் வசிக்கின்றனர்.
காஞ்சிபுரம் வாக்காளர்கள் எண்ணிக்கை :
![]() |
முக்கிய கட்சி வேட்பாளர்கள்:
மரகதம் குமாரவேல் M.P.,(ADMK)

காஞ்சிபுரம், பட்டுக்கு பிரபலம். முக்கியத் தொழில் விவசாயம். பன்னாட்டு நிறுவனங்கள் இங்கு அதிகம். இந்தத் தொழில்களுக்கும் மத்திய அரசின் மூலம் பல திட்டங்களை எம்.பி-யால் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் இவர், தொகுதிப்பக்கமே எட்டிப் பார்க்கவில்லை.பிரசாரத்தில் பேசிய ஜெயலலிதா, ‘நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு மரகதம் குமரவேல் ஓடோடி வருவார். உங்களையே சுற்றிச் சுற்றி வந்து உங்கள் குறைகளைப் போக்குவார்’ என்றார். ஜெயலலிதா சொன்னபடி, மரகதம் நடந்துகொள்ளவில்லை.
‘மக்களின் தொடர்பு எல்லைக்கு வெளியே’ தான் இருக்கிறார் மரகதம். காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு அமைச்சர்கள் யாருமே இல்லை. எனவே அமைச்சர், எம்.எல்.ஏ., எம்.பி என எல்லாமுமாக இருப்பவர்கள் மரகதமும் குமரவேலும்தான். இந்த செல்வாக்கை வைத்து தொகுதி மக்களுக்கு பல நல்ல திட்டங்களை மரகதம் கொண்டு வந்திருக்க முடியும். அவர், எதையும் செய்யவில்லை.
பிரச்சாரத்தின் போது மக்கள் குரல் :
"ஏம்மா.. எதுக்கு இங்க வர்றே.. 5 வருஷமா நீ எங்களுக்கு இன்னா செஞ்சே" என்று பொதுமக்கள் வழிமறித்து கேள்வி கேட்டே காஞ்சிபுரம் அதிமுக எம்பியை விரட்டி அடித்திருக்கிறார்கள்"
வாக்குறுதிகள் :ADMK
செல்வம் ஜி (DMK)

காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக வழக்கறிஞர் ஜி.செல்வம் போட்டியிடுகிறார்.கடந்த 1996ம் ஆண்டு திமுக பிரதிநிதியாக பதவி வகித்தவர். 1997ம் ஆண்டு நடந்த கூட்டுறவு சங்க தேர்தலில் போட்டியிட்டு கூட்டுறவு ஊரக வளர்ச்சி வங்கியின் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டார். 2008ம் ஆண்டு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராக இருந்தார். 2008 முதல் 2012 வரை மாவட்ட ஆதி திராவிடர் நலக்குழு அமைப்பாளராக இருந்தார். தற்போது வாலாஜாபாத் வடக்கு ஒன்றிய செயலராக இருக்கிறார்.கடந்த 2014ம் ஆண்டு இதே காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம்(மரகதம்) தோல்வி அடைந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் அவரையே அத்தொகுதியில் திமுக களமிறக்கியுள்ளது. செல்வம் தனது தந்தை கணேசனை போன்றே இளம் வயதில் இருந்து திமுகவில் அரசியல் பணிகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாக்குறுதிகள் : DMK
கடந்த முறை மரகதம் தந்த வாக்குறுதிகளை இந்தமுறை இவர் சொல்லிருக்கார் , ஜெயிச்சா செய்வாரு னு தான் நம்புறோம்.
ரஞ்சனி T (NTK) |
![]() |
முனுசாமி A (AMMK) |
சுயட்சை வேட்பாளர்கள்:
- இளங்கோவன் M
- தேவராஜன் C
- பொன் ஜெயராமன் S P
- மரகதம் ம
- முனுசாமி A
- ரமேஷ் S
- வினோத்ராஜ்
**மக்கள் நீதி மையம் வேட்பாளர் தங்கராஜன்(IKK) சில காரணங்களால் நம் ஊரில் போட்டியிடவில்லை **
என் கருத்து:
ADMK மற்றும் DMK என்று இரண்டு கட்சிகளை தவிர மற்ற கட்சிகளுக்கு போடலாம் னு நினைத்தேன்.சுயட்சை வேட்பாளர்கள் பற்றியும் நன்கு அரிய முடியவில்லை, கமல்ஹாசன் பேசுவது நம்பிக்கை தந்தது, அனால் அந்த கட்சியில் (காஞ்சிபுரம் நாடாளமன்றம் தனித்தொகுதி)யாரும் போட்டியிடவில்லை மரகதம் க்கு போட்டு பெருசா ஏதும் நடக்கல, இந்த முறை வேற வழி இல்ல....
"மாற்றம் ஒன்ரே மாறாதது "
NDTV POLL TRACKER RESULT: DMK
--------------------------------------------------------------------------------------------------------------------------
"New voters need to vote. They need to get out there. Every vote counts. Educate yourself too. Don't just vote. Know what you're voting for, and stand by that."
18/04/2019






Comments
Post a Comment